AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!
ஏஐ உதவியுடன் ஐவிஎஃப் முறையில் மெக்சிகோ நாட்டின் செயற்கை கருத்தரிப்பு மையம் குழந்தையை பிறக்கவைத்து சாதனை படைத்துள்ளது.மருத்துவ வரலாற்றில் மைல்கல்லாக, முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன், ஐவிஎஃப் முறையில் முதல் குழந்தை பிறந்தது AI உதவியுடன் பிறந்த குழந்தை!
மருத்துவத் துறையிலும் ஏ.ஐ.தொழில்நுட்பம் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது.அந்தவகையில் மெக்சிகோ நாட்டில் உள்ள செயற்கை கருத்தரிப்பு
மையத்தில், வழக்கமாக மனிதர்களின் கைகளால் மேற்கொள்ளப்படும் ICSI என்ற சிகிச்சை முறை, முழுமையாக ஏ.ஐ. மற்றும் ரோபோக்களின் உதவியுடன் செய்து முடிக்கப்பட்டு வெற்றிகரமாக ஆண் குழந்தை பிறந்தது.
