பாஜக -நாம் தமிழர் கூட்டணி கன்பார்ம்? சீமான் நேரடியா போய் அவரையே பார்த்துட்டாரே! நெருங்கி வந்துட்டாரே
�
நாம் தமிழர் – பாஜக இடையே கூட்டணி உருவாக போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் சீமான் நடத்திய மீட்டிங் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.அதிமுக – பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பாஜகவின் ஒரு லாபி இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம். அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது
�
கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.கூட்டணிக்கு பிளான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். இந்த
�
நிலையில் சீமான் ஒருவேளை பாஜக கூட்டணிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். சீமானிடம் கணிசமான வாக்குகள் உள்ளன. நாம் தமிழர் கட்சிக்கு 8% சதவிகிதம் வரை வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகள் கணிசமாக என்டிஏ கூட்டணிக்கு செல்லும். பொதுவாக சீமானுக்கு வாக்களிப்பவர்கள்.. அதிமுக, திமுகவிற்கு மாற்று என்று கருதுபவர்கள் . அதோடு தேசிய கட்சிகளை விரும்பாத தமிழ் தேசியம் பேசக்கூடியவர்கள். இதனால் இவர்கள் அப்படியே பாஜக கூட்டணிக்கு செல்வது சரியாக இருக்காது. அதற்கு வாய்ப்பும் இல்லை. இதனால் 8 சதவிகிதம்
�
அப்படியே பாஜக கூட்டணிக்கு செல்லாது . அதே சமயம் நாம் தமிழர் கட்சி திமுக, அதிமுக இரண்டையும் எதிர்த்தாலும் கூட.. அதிமுக மீது ஒரு சாப்ட் கார்னர் உள்ளது. இதனால் என்டிஏ கூட்டணி இது ஒருவகையில் சாதகம்தான்.பாஜக பிளான் அதிமுக கூட்டணியிலேயே உள் கூட்டணி கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எடப்பாடியிடம் தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை சேருங்கள் என்ற கோரிக்கையை பாஜக வைக்க வேண்டியது இருக்காது. தேமுதிக, பாமக, புதிய தமிழகம் தொடங்கி இன்னும் சில உதிரி கட்சிகள் என்று பெரிய கூட்டணி லிஸ்ட் அமித் ஷா கையில் உள்ளதாம். இந்த லிஸ்டில் நாம் தமிழர் பெயரும் உள்ளது
�
என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவர்களுடன் நாம் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்கிறோம். இவர்கள் யாருடனும் மோதல் மட்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அமித் ஷா கூறி உள்ளதாக தெரிகிறது.சீமான் சந்திப்பு நாம் தமிழர் – பாஜக இடையே கூட்டணி உருவாக போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் சீமான் நடத்திய மீட்டிங் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதன்படி பாஜக மூத்த நிர்வாகி எஸ்ஜி சூர்யாவை சீமான் சந்தித்துள்ளார். இதன் மூலம் அவர் பாஜகவிற்கு மேலும் நெருக்கமாகி உள்ளார். இவர்கள் 30 நிமிடம் ஆலோசனை
�
செய்ததாககூறப்படுகிறது . பாஜக – நாம் தமிழர் கூட்டணியால் பயன் அடைய போகும் முதல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் சீமான் ஒருவேளை பாஜக கூட்டணிக்கு வந்தால் சீமானை மாற்று என்று நினைத்தவர்கள் விஜய் பக்கம் செல்வார்கள். பொதுவாக சீமானுக்கு வாக்களிப்பவர்கள்.. அதிமுக, திமுகவிற்கு மாற்று என்று கருதுபவர்கள் . அதோடு தேசிய கட்சிகளை விரும்பாத தமிழ் தேசியம் பேசக்கூடியவர்கள். அதே சீமான் கூட்டணி வைக்க போனால்.. மக்கள் விஜய் பக்கம் போகும் வாய்ப்புகள் உள்ளன. திமுகவை கண்டிப்பாக இந்த கூட்டணி பாதிக்கும். ஏனென்றால் சட்டசபை தேர்தல்,
�
லோக்சபா தேர்தலில் அதிமுக – திமுக வெற்றி இடையிலான வாக்கு வேறுபாடு நாம் தமிழர், பாஜக வாக்குகள்தான். இந்த வாக்குகள் எல்லாம் ஒன்றாக அதிமுக – பாஜக – நாம் தமிழர் கூட்டணிக்கு சென்றால்.. அது திமுகவிற்கு சிக்கல். அதாவது குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் திமுக வென்ற தொகுதிகளை திமுக இழக்கும் அபாயம் உள்ளது. பொதுவாக திமுக – அதிமுக இடையிலான வெற்றி வேறுபாடு 2-3 சதவிகிதம்தான். இப்போது நாம் தமிழர் இந்த கூட்டணிக்கு வந்தால் அதில் பெரிய பாதிப்பு ஏற்படும். திமுகவிற்கு சிக்கலாக மாறும்.
