அமெரிக்காவிடம் மோதல் எதிரொலி | இந்தியர்களுக்கு 85,000 விசாக்களை வழங்கிய சீனா இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 9, 2025 வரை இந்தியர்களுக்கு 85,000க்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கியுள்ளது.அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன்
�
செயல்பட்டுவரும் ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார். எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்துள்ளார். அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார்.
�
பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தி வருகிறது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்துள்ளது.தொடர்ந்து, அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியையும் சீனா அதிரடியாக நிறுத்தி உள்ளது. மேலும், அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கிலிருந்து விமானங்களை வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. இதற்கிடையே, சீனாவின் பதிலடி நடவடிக்கை காரணமாக இறக்குமதிகளுக்கு 245% வரை வரி
�
விதிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் உச்சத்தை அடைந்துள்ளது.இந்த நிலையில், இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 9, 2025 வரை இந்தியர்களுக்கு 85,000க்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சீனத் தூதர் சூ ஃபீஹோங், “ஏப்ரல் 9, 2025 நிலவரப்படி, இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஆண்டு சீனாவுக்குச் செல்லும்
�
இந்திய குடிமக்களுக்கு 85,000க்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கியுள்ளன. சீனாவைப் பார்வையிடவும், மற்றும் நட்புரீதியான சீனாவை அனுபவிக்கவும் அதிகமான இந்திய நண்பர்களை வரவேற்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பயணத்தை எளிதாக்க சீன அரசாங்கம் பல தளர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது:
ஆன்லைன் முன்பதிவு இல்லை:
இந்திய விண்ணப்பதாரர்கள் இப்போது ஆன்லைன் முன்பதிவுகள் இல்லாமல், தங்கள் விசா விண்ணப்பங்களை வேலை நாட்களில் விசா மையங்களில் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.
பயோமெட்ரிக் விலக்கு குறுகிய காலத்திற்கு சீனாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு பயோமெட்ரிக் தரவை வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இது செயலாக்க நேரத்தைக் குறைக்கிறது.விசா கட்டணம்:
இப்போது, சீன விசாவை மிகக் குறைந்த விலையில் பெறலாம். இது இந்திய பார்வையாளர்களுக்கு பயணத்தை மிகவும் மலிவு விலையில் வழங்குகிறது.விரைவான செயலாக்க நேரங்கள் விசா ஒப்புதல் காலக்கெடு மிகவும் நெறிப்படுத்தப்பட்டு உள்ளது. இது விரைவான விநியோகத்தை அனுமதிக்கிறது மற்றும் வணிக மற்றும் ஓய்வுப் பயணிகளுக்குப் பயனளிக்கிறது.சுற்றுலா சீனா இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான பயணத்தை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. திருவிழாக்கள் மற்றும் இடங்கள் போன்ற அதன் கலாசார மற்றும் பருவகால ஈர்ப்புகளைக் காட்டுகிறது.
