சோனியா – ராகுலுக்கு 7 ஆண்டு சிறை? நேஷனல் ஹெரால்டு வழக்கு ED குற்றப்பத்திரிகையின் திடுக் பின்னணி நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகை குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சோனியா காந்தி முதல்
�
குற்றவாளியாகவும், ராகுல் காந்தி 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை நிரூபித்தால் இருவருக்கும் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம் மூலம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது.
�
அதன்பிறகு காங்கிரஸ் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. அதோடு அசோசியேட்ஸ் ஜர்னல்ஸ் நிறுவனத்தை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கைப்பற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பிறகு வருமான வரித்துறை விசாரணையை தொடங்கியது. அப்போது சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது.
�
இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணைக்குள் நுழைந்தது. விசாரணையில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் சட்டவிரோதமாக ‛யங் இந்தியா’ என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ‛யங் இந்தியா’ நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர். இதனால் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி
�
மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கு தொடர்பான சோனியா காந்தி, ராகுல் காந்தியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அமலாக்கத்துறை தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
�
இந்நிலையில் தான் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குற்றப்பத்திரிகையில், ‛‛நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் வெளியிட்டு வந்தது. இந்த நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் குற்ற சதி செய்துள்ளனர். அதன்பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் ‛யங் இந்தியா’ நிறுவனத்துக்கு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கைப்பற்றி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
