கர்நாடகா லாரி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு.. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை கர்நாடகா லாரி உரிமையாளர்கள் சுங்கக் கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு லாரிகள் கர்நாடகா வழியே செல்ல வேண்டாம்.கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், இன்று முதல்
�
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
சுங்கக் கட்டணம் உயர்வு, டீசல் விலை உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (14ஆம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் துவங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
�
மேலும், இந்த லாரி வேலை நிறுத்தத்தின் காரணமாக தமிழ்நாடு, கேரளா உள்பட வெளிமாநில லாரிகளும் கர்நாடகா மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படாது என கர்நாடகா லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.
