முடங்கிய நிலையில் வாட்ஸ்அப் பயனர்கள் X தளத்தில்

images-1-1.jpg

திடீரென முடங்கிய வாட்ஸ்அப் வாட்ஸ்அப் திடீரென முடங்கிய நிலையில் பயனர்கள் X தளத்தில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.

சிலருக்கு மெசேஜ் அனுப்பும் போது அந்த மெசேஜ் போகவில்லை எனவும் சிலர் புகைப்படங்கள் அனுப்பும் போது இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் ஸ்டேட்டஸ் (Status) பதிவிட முடியவில்லை என்றும் புகார்களை தெரிவித்துள்ளனர்.

மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்அப் செயலி இன்று (12) உலகளவில் பல பயனர்களுக்கு செயலிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சுமார் 88 சதவீத பயனர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் தங்கள் செய்தியை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 சதவீத பயனர்கள் பயன்பாட்டிலேயே சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும், உள்நுழைவு சிக்கல்களுக்கு முகங்கொடுத்த 2 சதவீதத்தினரும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *