கொத்தாக அடித்து தூக்கிய எடப்பாடி பழனிசாமி.. உண்மையில் சாமர்த்தியசாலிதான்

download-1-1.jpg

ஒரே கல்லில் 4 மாங்காய்.. கொத்தாக அடித்து தூக்கிய எடப்பாடி பழனிசாமி.. உண்மையில் சாமர்த்தியசாலிதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் சாமர்த்தியசாலி என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார். நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய செய்தியாளர் சந்திப்பின் மூலம் அவர் ஒரே கல்லில் 4 மாங்காய் அடித்துள்ளது உறுதியாகி உள்ளது.தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி

உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி – அமித் ஷா – அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது.

ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது, என்றுள்ளார். 4 மாங்காய் அடித்த எடப்பாடி அமித் ஷா நடத்திய செய்தியாளர் சந்திப்பின் மூலம் அவர் ஒரே கல்லில் 4 மாங்காய் அடித்துள்ளது உறுதியாகி உள்ளது. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். 1. அதிமுக மோதல்

முடிவு – அதிமுகவின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிட மாட்டோம். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் எப்போதும் தலையிடப்போவதில்லை. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி, இருவருக்குமே பலனளிக்கக் கூடியது; யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றி பிறகுதான் பேச இருக்கிறோம். ஆட்சி அமைப்பது, ஆட்சியில் பங்கு என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம் என்று அமித் ஷா கூறி உள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ், செங்கோட்டையன் விவகாரத்தில் எடப்பாடி ரூட் கிளியர் ஆகி உள்ளது.2. அண்ணாமலை அவுட் – பாஜக மாநிலத் தலைவராக

நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். இவருக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவரானார் நயினார் நாகேந்திரன். அவர் போட்டியின்றி அண்ணாமலை இடத்தை நிரப்ப உள்ளார். பாஜக மாநில தலைவர் ஆக 10 வருடம் கட்சியில் இருக்க வேண்டும். ஆனாலும் அது அடையாள விதிதான் கட்டாய

விதி கிடையாது. இந்த நிலையில் அண்ணாமலை நீக்கப்பட்டு 8 வருடமாக கட்சியில் உறுப்பினராக இருக்கும் நயினார் அந்த இடத்தை பிடித்து உள்ளார். 2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவர் தேசிய அரசியலுக்கு செல்வதால் எடப்பாடி – அண்ணாமலை மோதல் இனி இருக்காது. 3. எடப்பாடி முதல்வர் – தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி

அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். இதனால் எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது.4. தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகி உள்ளார் நயினார் நாகேந்திரன். அவர் போட்டியின்றி அண்ணாமலை இடத்தை நிரப்ப உள்ளார். பாஜக மாநில தலைவர் ஆக 10 வருடம் கட்சியில் இருக்க வேண்டும். ஆனாலும் அது அடையாள விதிதான் கட்டாய விதி கிடையாது. இந்த நிலையில் அண்ணாமலை நீக்கப்பட்டு 8 வருடமாக கட்சியில் உறுப்பினராக இருக்கும் நயினார் அந்த இடத்தை பிடித்து உள்ளார். இதில் நயினார் முன்னாள் அதிமுக நிர்வாகி. எடப்பாடிக்கும் நட்பானவர். இதனால்.. அதிமுக எளிதாக அவருடன் சீட் ஷேரிங் பற்றி பேச முடியும். கூட்டணி இடங்களை பகிர்வதில் இனி அவருக்கு சிக்கல் இல்லை.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *