தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்பது ஆளுநர்களுக்கு எதிரானது மட்டுமல்ல.. ஆளுநர்களை திரைமறைவில் ஆட்டுவிக்கும் பிரதமர் மோடிக்கும் அவரது தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கும்தான் எச்சரிக்கை என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக சித்தராமையா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர்
�
ஆர்.என்.ரவி, அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டார். இதனால் தமிழ்நாடு அரசு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உச்சநீதிமன்றம் சென்றது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஜனாதிபதிக்கு மசோதாக்களை அனுப்பிய ஆளுநர் முடிவை ரத்து செய்து, மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதலும் அளித்துவிட்டது.உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு எதிரானது
�
மட்டும் அல்ல; ஆளுநர்களை திரைமறைவில் இயக்கி வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் எச்சரிக்கைதான். இதுநாள் வரை, ஆளுநர்கள் விவகாரத்தில் இருந்த குழப்பங்களுக்கு முடிவு கிடைத்துவிட்டது. மாநில அரசுகள் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க உச்சநீதிமன்றம்
�
காலக்கெடுவும் நிர்ணயித்துவிட்டது. இதுவும் இனி எந்த குழப்பங்களும் ஏற்படாமல் இருக்க உதவும்.பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்ய பாஜக முயற்சித்து வருகிறது. இது ஜனநாயக விரோதம். கர்நாடகா ஆளுநரும் மாநில அரசின் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார்; ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும் கர்நாடகா மாநில அரசு, ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல் நிதானமாகவே இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நல்ல வழிகாட்டுதலை வழங்கும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
