பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட வியாழேந்திரன் இலஞ்ச வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (08) பிற்பகல், சந்தேக நபரான முன்னாள் இராஜாங்க அமைச்சரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்யத் தவறியதால், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
