தமிழக பாஜக தலைவராக மீண்டும் அண்ணாமலை? கூட்டணி பேச்சுக்கு நயினார் நாகேந்திரன்? டெல்லி ஆலோசனை தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றுவதற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டெல்லி மேலிடம் மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறதாம். இதன்படி தமிழ்நாடு பாஜக தலைவராக மீண்டும் அண்ணாமலையே நியமிக்கப்பட்டாலும் அண்ணா திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான அதிகாரம் பறிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் தலைமையிலான குழுதான் பேச்சுவார்த்தை
�
நடத்தும் என்கிற யோசனையும் பரிசீலனை செய்யப்படுகிறது என்கின்றன பாஜகவுக்கு நெருக்கமான வட்டாரங்கள்.பாஜகவின் பல்வேறு மாநில தலைவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். பாஜகவின் மாநிலத் தலைவர்கள் மாற்றத்துக்குப் பின்னர் புதிய தேசிய தலைவர் அறிவிக்கப்பட உள்ளார். இதற்கான பணிகளில் பாஜக மேலிடம் பிஸியாக இருந்து வருகிறது.தமிழ்நாட்டில் பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை நீக்கியாக வேண்டும் என்பதுதான் கூட்டணிக்கான அதிமுகவின் ஒரே நிபந்தனை. இதனை பாஜக தலைமை பரிசீலனை செய்வதாக மட்டுமே அதிமுக தரப்பிடம் தெரிவித்திருந்தது. இதனையடுத்தே அண்ணாமலை டெல்லிக்கு
�
�
வரவழைக்கப்பட்டார். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை, கடந்த சில நாட்களாக தாம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவது உறுதி என்கிற கருத்தையே தெரிவித்து வருகிறார். இதனால் புதிய தலைவர் பதவிக்கான பட்டியலில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன. இன்னொரு பக்கம், தமிழகத்தில் பாஜக ஆக்டிவ்வாக பேசுபொருளாக இருக்க காரணமே அண்ணாமலைதான்; அவரை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றவே கூடாது என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
�
�
அண்ணாமலையை மாற்றவே கூடாது என சில இடங்களில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன.அண்ணாமலையை மாற்றுவதற்கான எதிர்ப்புகளையும் டெல்லி மேலிடம் தற்போது கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆலோசித்து வருகிறதாம் இதன்படி, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே நீடிக்கலாம்; அதே நேரத்தில் அண்ணா திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை நயினார் நாகேந்திரன் தலைமையிலான ஒரு குழு நடத்தலாம் என்கிற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாம். இந்த யோசனையை அதிமுக ஏற்குமா? தமிழக பாஜகவினர் ஏற்பார்களா? என்பது குறித்த விவாதமும் தற்போது நடந்து வருகிறது என்கின்றன பாஜகவுக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
