மலையாக தமிழர்களுக்கு பத்தாயிரம் வீடுகள் மோடி அறிவிப்பு

screenshot39263-down-1726547731.jpg

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து அவர் தமது எக்ஸ் தளத்தில், இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும் என பதிவிட்டுள்ளார்.

பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ள இந்திய பிரதமர், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் தமக்கு தெரிந்தவர்கள் அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் என பதவிட்டுள்ளார்.

தமது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் என மோடி, எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட தமிழ் மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என மலையக பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமூகமான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவுப் பாலமாக திகழ்கின்றனர். இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என இந்திய பிரதமர் மோடி தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *