மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனம் அதிகார பூர்வமாக உருவாக்கம்.

download-9-20.jpeg

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனம் அதிகார பூர்வமாக உருவாக்கம்.

கிராம மட்டடங்களில் இயங்கி வந்த சுய உதவிக் குழுக்கள் மாவட்ட ரீதியில் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனமாக அதிகார பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து சுகாதார திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற மட்டக்களப்பு மெதடித்த திருச்சபை புகலிடம் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் கே.என்.எச் நிறுவனத்தின் நிதி உதவியுடன் பெண்களை சமூகப் பொருளாதார அரசியல் ரீதியாக வலுப்படுத்தி சிறுவர்களின் நலன்களையும் உரிமைகளையும் பேணுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் சம்மேளனம் ஒன்று வியாழக்கிழமை(27.03.2025) உருவாக்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்களின் திட்ட உத்தியோகஸ்தர் ரஜினி செல்லையா அவர்களின் ஏற்பாட்டில், புகலிடத்தின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகஸ்தர் டேவிட் சியாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அருணாழினி, மற்றும் ஏறாவூர் பற்று மகளிர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.பிரதீபா நெல்சன், கே.என்.எஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான சுய உதவிக் குழுக்களின் இணைப்பாளர் திருமதி.நளாயினி ராஜரத்தினம் அந்நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் பாத்திமா சாஜிதா மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இயங்கும் சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள், என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதபோது கிராம மட்டத்தில் இயங்கி வந்த சுய உதவிக் குழுக்கள் மாவட்ட ரீதியில் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனம் இதன்போது அதிகாரi பூர்வமாக உருவாக்கப்பட்டது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *