தமிழ்நாட்டில், கடந்த மூன்று மாதங்களில், ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், நான்கு பேர், ‘ரேபிஸ்’ நோயால் உயிரிழந்திருப்பதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த சில ஆண்டுகளாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் நான்கு லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 47 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் இதுவரை ஒரு லட்சத்து 24 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரேபிஸ் நோயால் நான்கு பேர் இறந்துள்ளனர்.
நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
