மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு

download-2-39.jpeg

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் வெளிநாட்டு பயணதடையை இன்று (20) விதித்துள்ளது.

மார்ச் 2020 இல் சுனில்ரத்நாயக்கவிற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மிருசுவிலில் இருந்து இடம்பெயர்ந்த 9 பேர் 2000ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி தங்கள் வீடுகளை பார்ப்பதற்காக மீண்டும் மிருசுவில் பகுதிக்கு சென்றவர்களில் பதின்ம வயதினரும்,ஐந்து வயது சிறுவனும் உள்ளடங்கியிருந்தனர்.அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிவந்தவேளை இரண்டு இராணுவத்தினர் அவர்களின் கண்களை கட்டி மோசமாக தாக்கியுள்ளனர். எனினும் இராணுவத்தின் பிடியிலிருந்து ஒரு இளைஞன் தப்பிய நிலையில் ஏனைய 8 பேரும் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *