பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல் பிரதமர் மோடி வாழ்த்து வரை
இன்றைய தலைப்புச் செய்திகளில் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியது முதல் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த செய்திகள் வரை பார்க்கலாம்.அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதியில் பத்திரமாக இறங்கியது டிராகன் விண்கலம்… 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்…
இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடல் பகுதியில் இறங்கியது டிராகன் விண்கலம்… விண்வெளியில் இருந்து பூமிக்கு 17 மணி நேரம் பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர்கள்…விண்கலத்தில் இருந்து வெளியேறிய விண்வெளி வீரர்களை வரவேற்ற மீட்புக்குழுவினர்… மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு…
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸால் 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை… பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து…
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்காவின் புதிய அரசு முயற்சி செய்தது. இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ரொக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இந்த மீட்பு விண்கலத்தில் ரஷிய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் இருந்தனர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.
இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து, க்ரு டிராகன் விண்கலத்துக்கு சென்றனர். அவர்களுடன் இங்கிருந்த சென்ற விண்வெளி வீரர்களும் பயணிக்கிறார்கள்.
இது தொடர்பாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், வானிலை சீராக இருந்தால் க்ரு டிராகன் விண்கலம் புளோரிடா கடல் பகுதியை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.இந்நிலையில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த டிராகன் விண்கலம், புளோரிட கடற்பரப்பை நோக்கி நெருங்கியது. தரையிறங்கும் டிராகன் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் குழு பாதுகாப்பாக மீட்டது.
17 மணி நேர பயணத்துக்கு பிறகு புளோரிடாவில் உள்ள கடற்கரையில் அவர்களது விண்கலம் தரையிறங்கியது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பினார்.
இந்த விண்கலம் இன்று (19) அதிகாலை 3.27 அளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் அவர்கள் பாதுகாப்பாக பூமிக்க வந்துள்ளமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
�
