பிமல் ரத்நாயக்கவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாராளுமன்ற உரையின் சிறுபகுதி

images-29.jpeg

பிமல் ரத்நாயக்கவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாராளுமன்ற உரையின் சிறுபகுதி இது.
“1977 ஆம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும் பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மக்கள் தீர்ப்பின்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதி முறையை நிறுவியது. 1977 இல் தமிழ் மக்கள் மீதும், எதிர்த்தரப்பு அரசியல் கட்சி யினர் மீதும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது.

அதிகாரத்திற்கு வந்து ஒரு வருடம் கழியும் போது அதாவது, 1978 இல் பயங்கர வாத தடைச்சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வந்து ஜனநாயகத் திற்கு எதிராக அமுலாக்கத் தொடங்கியது. 1980 ஆம் ஆண்டு தொழிற்சங்கப் போராட் டத்தில் ஈடுபட்ட ஒரு இலட்சம் அரச ஊழி யர்களை பணிநீக்கம் செய்தது. 1981 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலை கொள்ளை யடித்து, அந்நேரம் யாழ். நூலகத்தையும் எரித்து சாம்பலாக்கியது.
அதையடுத்து, உரிய தருணத்தில் நடத்தவேண்டிய பாராளு மன்றத் தேர்தலை நடத்தாது “மக்கள் தீர்ப்பு” என்ற பெயரில் தேர்தல் அதிகாரிகளே குற்றம் சுமத்தும்படியாக

இலங்கையின் மோசடி மிகுந்த தேர்தலை நடத்தி, வாக்குகளை கொள்ளையடித்து சட்டவிரோதமாக பாரா ளுமன்றத்தை ஆறு ஆண்டுகளுக்கு நீடித்தது.
தவிர, தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங் கள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் மதத் தலைவர்களை அடக்கியாண்ட துடன், 1983 கறுப்பு ஜூலையில் தமிழ் மக்க ளுக்கு எதிரான இனப்படுகொலையை அப் போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நெறிப்படுத்தி முப்பது வருடகால சிவில் யுத் தத்திற்கும் வழிசமைத்தது. ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை கலவரத்தைப் பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளை

தடை செய்தது.
மக்கள் தீர்ப்பு என்ற தேர்தல் கொள்ளைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் தோழர் ரோஹன விஜேவீர சமர்ப்பித்த மனுவையும் நிராகரித்ததோடு, 1983 இல் தொடங்கிய ஐக்கிய தேசிய கட்சியின் ஜனநாயக விரோத அடக்குமுறை ஆட்சி படிப்படியாக பயங்க வாத, கொலைகார சர்வாதிகார ஆட்சியாக மாற்றிக்கொள்ளப்பட்டது.

இவ்வாறாக முயற்சித்து வரலாற்றை திரிபுபடுத்தி உண்மைகளை புதைக்க முயற்சி செய்தபோதிலும், மக்களால் மக்களின் வரலாற்றை எழுத தொடங்குகின்ற ஒரு நிலைமை கடந்த தேர்த லின் போது ஆரம்பிக்கப்பட்டது.
வன்முறைகள், பீதிநிலை தலைவிரித்தாடிய கடந்த சர்வாதிகார ஆட்சியில் பல்லாயி ரக்கணக்கான குற்றச்செயல்கள் புரியப்பட் டுள்ளன”
என்று கடந்த 14ம் திகதி மிக விரிவான உரையை பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் நிகழ்த்தினார்.

இதில் கடந்த கால அரசுகள் எவையும் கூறாத விடயத்தை வெளிப்படுத்தினார், அதாவது ஜூலைக் கலவரம் ஒரு இனக்கலவரம் என்றும், தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள், யாழ் நூலகம் சிங்கள இனவாதிகளால் எரிக்கப்பட்டது என்ற கருத்துக்கள் அவையாகும்
ஏற்கனவே தமிழ் மக்களிடம் பலமான வரவேற்பைப் பெற்றுள்ள பிமல் ரத்நாயக்க மீது தற்போது அவர் பாராளுமன்றில் தமிழர்களுக்காக உரையாற்றி நடவடிக்கைகளை முன்னெடுப்பது பலத்த வரவேற்பை தமிழர்களிடம் உண்டாக்கியுள்ளது.
அத்துடன் பிமல் ரத்நாயக்க அவர்கள் ஊழலுக்கு எதிரான ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணத்தை வடக்கிலுள்ள பல திணைக்களங்களை இலக்குவைத்து விஜயம் செய்யவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *