தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப் செய்கிறார்கள்? உளறித் தள்ளிய பவன் கல்யாண்.. பிரகாஷ் ராஜ் பதிலடி சென்னை: இந்தி வேண்டாம், ஆனால் பாலிவுட்டில் இருந்து வரும் பணம் மட்டும் வேண்டும் என்று தமிழக அரசியல்வாதிகளை விமர்சித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியை திணிக்காதீர்கள் என்று கூறுவதால் பிற மொழியை நாங்கள் வெறுக்கிறோம்
�
என்பதல்ல என்றும் பிரகாஷ் ராஜ் பதில் அளித்திருக்கிறார்.தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட நாள் தொடங்கி இதுவரை இந்தி திணிப்பு தொடர்பாக விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தேசிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு பாஜக மற்றும் அமமுக கட்சிகள் மட்டுமே ஆதரவாக இருந்து வருகின்றன.ஏனைய கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில்
�
மும்மொழி கொள்கையை எதிர்க்கின்றன. தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தேசிய அளவில் தொடர் விவாதமாக மாறி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தாய் மொழி குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையாக சாடி இருக்கிறார். ஜன சேனா கட்சியின் 12வது ஆண்டு விழாவில் பவன் கல்யாண் பேசுகையில், நாட்டில் 2 மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உட்பட
�
பல மொழிகள் தேவை. மொழியில் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு மட்டுமல்லாமல், மக்களிடையே அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும். இந்தியாவில் பல மொழிகள் இருப்பது நல்லது.சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கின்றனர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கிறார்கள். பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் மட்டும் தேவை.ஆனால் அவர்களுக்கு இந்தி தேவையில்லையா? இது என்ன லாஜிக் என்று
�
கேள்வி எழுப்பியுள்ளார். பவன் கல்யாணின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் விவாதமாகியுள்ளது. ஏற்கனவே சனாதன தர்மம் தொடர்பான பவன் கல்யாணின் பேச்சிற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பவன் கல்யாணின் கருத்துக்கு நடிகரும், அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். பிரகாஷ் ராஜ் கன்னடத்தில் தனது எக்ஸ் பக்கத்தில், உங்களின் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று சொல்வது, வேறு மொழியை வெறுக்கிறோம் என்று
�
அர்த்தமில்லை. தாய் மொழியை தாயைப் போல் சுயமரியாதையோடு காப்பதற்காகதான். இதனை பவன் கல்யாணிடம் யாராவது கூறுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் பவன் கல்யாணின் கருத்துக்கு திமுகவினர் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தியில் டப் செய்து வெளியிடும் படங்களை மக்கள் பார்க்காமல் இருப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும், ஆனால் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்படுகிறது என்றும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்
