10/03/2025. Pothikai.fm
கொட்டும் கடும் மழைக்கு மத்தியில் நடந்தேறிய மட்/ பட் / தும்பங்கேணி கண்ணகி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2025
மட்/ பட் / தும்பங்கேணி கண்ணகி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி
பாடசாலை விளையாட்டு மைதானம் இன்றைய தினம் 10. 03. 2025 வித்தியாலய முதல்வர் மு.அருந்தவகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதிபட்டிருப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர்சி.சிறீதரன் கலந்து சிறப்பித்தார்.இதன்போது நாவலர்,பாரதி என 02 இல்லங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் திறனாய்வு போட்டிகள் இடம்பெற்றன.
மேலும் அதிதிகள் மலர்மாலை அணிவித்து பாண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டு தேசியக்கொடி , பாடசாலை கொடி ,இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு பின்னர் , இறைவணக்கம், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் , மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி , நிகழ்வை அலங்கரித்தன. மாணவர்களின் அணிநடை மரியாதை , சுவட்டு அஞ்சல் நிகழ்ச்சிகள், அதிதிகள் உரை , மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு , திருகோணமலை காணி சீர்திருத்த ஆணையாளர் நே.விமல்ராஜ்,பட்டிருப்பு கல்வி வலயம்பிரதிக்கல்விப் பணிப்பாளர் பொதுமுகாமைத்துவமும் தாபனமும், PS | இணைப்பாளர் P. திவிதரன் , கல்வி அபிவிருத்தி , பட்டிருப்பு கல்வி வலய மாணவர் அபிவிருத்தி பிரதிக்கல்விப் பணிப்பாளர் S.சுரேஸ் போன்ற முக்கிய அதிகாரிகளும் பொதுமக்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
