ஜனவரி முதல் மார்ச் 5 வரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்

images-3-2.jpeg

இதுவரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு 2025 ஜனவரி முதல் மார்ச் 5 வரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

மேலும் அவர், ”இந்த சம்பவங்களில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களால் நடத்தப்பட்டதாகவும் மீதமுள்ள 7 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்.

இருப்பினும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, இலங்கை பொலிஸார் 68 சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட T-56 ரக 6 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *