குப்பையில் முளைக்கும் குப்பைமேனியின் அற்புத குணங்கள்

images-1-38.jpeg

தோல் நோய்கள் உள்ளவராகில் குப்பைமேனி இலையுடன் சிறுதளவு மஞ்சள் வைத்து அரைத்து, அந்த தோல் நோய்கள் உள்ள இடத்தில் பூச, அனைத்து வகை தோல் நோய்களும் நீங்கிவிடும். முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெரும்.குப்பைமேனி வேர்களை நீரில் கொதிக்கவைத்து அருந்திவர, வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். இன்னும் பல எண்ணற்ற பலன்கள் அடங்கியுள்ளது.

குப்பைமேனி செடிகளை வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டு, நன்கு அலசி அதனுடன் ஆறு அல்லது ஏழு மிளகுகள் சேர்த்து அரைத்து, இந்தக் கலவையை காலையில் அரைத்த உடனே வெறும் வயிற்றில், ஒரு நெல்லிகாய் அளவு சாப்பிடவேண்டும். இப்படி வாரம் ஒரு முறை என்ற அளவில் மூன்று வாரம் சாப்பிட, உடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி, உடல் வலுப்பெறும், இரத்தம் சீராகும். இந்தக் கலவை சற்று காரமாக இருந்தால், மிளகுக்குப் பதில் திரிகடுகப் பொடி சிறிது சேர்த்து, உட்கொள்ளலாம்.குப்பைமேனி இலைச் சாற்றினை 4 துளிகள் அளவு நாக்கில் தடவலாம் அல்லது குப்பைமேனி இலையைக் காய வைத்துத் தூள் செய்து, ¼ தேக்கரண்டி அளவு உட்கொண்டுவர கோழை வெளிப்படும்.

குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.

குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவை சம அளவாக எடுத்துக்கொண்டு, வாணலியில் ஒன்றாக விட்டு, சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

மூட்டுவலியுள்ள பகுதிகளில் இதனை நன்றாகத் தேய்க்க மூட்டுவலி தீரும். 10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர, தேக அழகும், ஆரோக்கியமும் ஏற்படும்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *