வங்கதேசம் நாட்டிற்கு ஆபத்து.. ராணுவத் தளபதி எச்சரிக்கை!
தனது நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதால் கடுமையான பிரச்னை உள்ளது என வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் ஒப்புக்கொண்டுள்ளார்.அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய
�
வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில், ”தனது நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதால் கடுமையான பிரச்னை உள்ளது” என வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் ஒப்புக்கொண்டுள்ளார்.இதுகுறித்து ஆயுதப்படை விழாவில் பேசிய அவர், “நாம் உருவாக்கிய அராஜகத்தினை இன்று நாம் பார்த்து வருகிறோம். அதிகாரிகள் வழக்குகளில் சிக்கி உள்ளதால், இளைய
�
அதிகாரிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை பயப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், ஆயுதப்படைகளுக்கு இன்னும் கடமை அதிகரித்துள்ளது. உடனடியாக மக்கள் ஒற்றுமையுடனும், நிறுவனங்கள் கட்டுப்பாட்டுடனும் பணியாற்ற வேண்டும். மக்கள் இடையே தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மோதல் காரணமாக நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கருத்து வேறுபாட்டை களைய முடியாமல் போனால், தொடர்ச்சியாக உங்களுக்கு உள்ளே சண்டையிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொன்றுகொண்டே இருந்தால், நாட்டின் சுதந்திரத்திற்கும், ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
