சீமான் மனைவி கயல்விழி நாம் தமிழர் கட்சி பொதுச்செயலாளர்? கொந்தளித்த காளியம்மாள்- வெளியேறுவது ஏன்?நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், அக்கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு காரணமே கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சீமான் மனைவி கயல்விழி நியமனம் செய்யப்படுகிறார் என்கிற முடிவுதான் என்கின்றன அக்கட்சி
�
வட்டாரங்கள்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார். அக்கட்சியில் ஏராளமான மாநில ஒருங்கிணைப்பாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர்களும் இருந்தனர்; இவர்களில் பெரும்பாலானோர் சீமானின், இந்துத்துவா சார்பு அரசியல் நிலைப்பாடுகளால் வெளியேறிவிட்டனர்.தந்தை பெரியார் குறித்து சீமான் அதி உச்சமாக இழிவு செய்ததைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை விட்டு பல முன்னணி நிர்வாகிகள் கொத்து கொத்தாக விலகி திமுக மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர்
�
காளியம்மாள். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள்,. கடந்த சில மாதங்களாகவே ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருந்து வருகிறார். குறிப்பாக, காளியம்மாளை பிசிறு என விமர்சித்து சீமான் பேசிய ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் அவர் ஆக்டிவ்வாகவும் செயல்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சீமானுடன் ஒரு மேடையேறிய காளியம்மாள், பிரபாகரனுடன் சீமான் பேசியதே 12 நிமிடம்தான் என பகிரங்காக பேச பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டது. இதன் பின்னர் நாம் தமிழர் கட்சி மேடைகளில் காளியம்மாள் பேசுவதும் இல்லை.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காளியம்மாள், நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறுகிறார்; திமுக அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் இணயப் போகிறார் என்கிற தகவல்கள் பரவி வருகின்றன. இது
�
தொடர்பாக கருத்து தெரிவித்த காளியம்மாள் கட்சியை விட்டு போனால் போகட்டும் என்றே கூறியும்விட்டார். காளியம்மாள் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, தடா சந்திரசேகர் மறைவுக்குப் பின்னர் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி காளியாக இருந்து வந்தது. அந்த பொதுச்செயலாளர் பதவிக்கு மனைவி கயல்விழியை நியமிப்பது என்கிற முடிவில்தான் சீமான் இருந்து வருகிறார். ஆனால் காளியம்மாள் உள்ளிட்ட சிலர் தங்களுக்குதான் பொதுச்செயலாளர் பதவி தர வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர்; இதனால் கயல்விழியை வழக்கறிஞர் அணி மூலம் நாம் தமிழர் கட்சிக்குள் சீமான் கொண்டு வந்தார். இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவி குறித்த அக்கப்போர் அமைதியாக இ
�
ருந்து வந்தது; வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டதும் சர்ச்சையானது. இந்த நிலையில் காளியம்மாள் தமக்கு ஆதரவாக தனியாக ஒரு கூட்டத்தை சேர்த்து வருவதாக பொதுவெளியிலேயே சீமான் பகிரங்கமாக விமர்சித்தார். அப்போதும் கூட தாம் அமைதியாக இருக்க வேண்டும் எனில் பொதுச்செயலாளர் பதவிதான் முக்கியம் என்பதாக காளியம்மாள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறுவது உறுதியாகி இருக்கிறது என்கின்றன. அடுத்த சில நாட்களில் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் வெளியேறுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறதாம்
