ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்து உள்ளது.கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியம் செய்துள்ளது. தலைமன்னார் கடற்படை முகாமுக்கு
�
அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளது. மீனவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை.கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துது. ஒரே இரவில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரவு 18 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். காலையில் மீண்டும் 15 பேர் கைது செய்யப்பட்டனர். தொடரும் கொடூரம்: இந்திய பெருங்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது மீண்டும் தொடர்கதையாகி இருக்கிறது. சில நாட்களாக அமைதியாக இருந்த இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்ய தொடங்கி உள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
�
நடத்துவது, கைது செய்வது என்று இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளையும் கடற்படை அபகரித்துள்ளது.கைது செய்யப்பட மீனவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இன்று இலங்கையில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்கள்.இந்திய பெருங்கடலில் மீண்டும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இலங்கை கடற்படையினர் இந்திய பெருங்கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்களிடம் மீண்டும் அத்துமீற தொடங்கி உள்ளனர். முக்கியமாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும்,
�
அவர்களின் படகுகளை திரும்பி தர மறுப்பதும் அதிகரித்து வருகிறது. இலங்கை அரசால் கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 365 மீன் பிடி படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்கிவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சி தகவல் நடவடிக்கை இல்லை: இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசும் இதில் பெரிதாக நடவடிக்கை எதையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.
�
சமீபத்தில்தான் , நாகை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் . ஒரு படகில் சென்ற 8 மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியம் செய்துள்ளது. தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளது. மீனவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை.
