F 35யால் பதறியடித்து ஓடி வந்த சீனா! அமெரிக்கா வைத்த ஆப்பு

download-56.jpeg

இந்தியாவின் கைக்கு வந்த ஸ்டெல்த் விமானம்.. F 35யால் பதறியடித்து ஓடி வந்த சீனா! அமெரிக்கா வைத்த ஆப்பு ஆசியா – பசிபிக் இடையிலான உறவு என்பது அமைதியை மையப்படுத்தி இருக்க வேண்டும், ஆயுத விற்பனையை மையப்படுத்தி இருக்க கூடாது என்று சீனா இந்தியா – அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு இந்தியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்வதாக

அறிவித்துள்ளார். இதன் மூலம் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும். இதன் மூலம் எஃப்-35 போர் விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு பல்வேறு சாதகங்கள் ஏற்படும்.பாகிஸ்தான் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் (MOFA) செய்தித் தொடர்பாளர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், ​​இந்தியாவிற்கு மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பங்களை வழங்குவது தவறானது. இதனால் பாகிஸ்தான் ஆழ்ந்த கவலையில் உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் காரணமாக ஆசிய

பிராந்தியத்தில் இராணுவ ரீதியான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். இதனால் எங்கள் பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது என்று பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவிடம் ஸ்டெல்த் தொழில்நுட்பம் இருப்பது பாகிஸ்தானுக்கு கடுமையான நெருக்கடியை வரும் காலத்தில் கொடுக்கும், என்று கூறி உள்ளது. சீனா கண்டனம் இதற்கு சீனாவும் தற்போது கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆசியா – பசிபிக் இடையிலான உறவு என்பது அமைதியை மையப்படுத்தி இருக்க வேண்டும், ஆயுத விற்பனையை மையப்படுத்தி இருக்க கூடாது என்று சீனா இந்தியா – அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஆசியா – பசிபிக் இடையிலான உறவு மூலம்

கேம் ஆடக்கூடாது. இதை அடிப்படையாக வைத்து ஸ்பெஷல் குரூப்களை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதெல்லாம் சர்வதேச பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் உதவாது. ஆசியா – பசிபிக் இடையிலான உறவை பிரச்சனையை உருவாக்குவதற்கான மையமாக பயன்படுத்த கூடாது என்று சீனா இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா எஃப்-35 போர் விமானங்கள் இந்தியாவிற்கு விற்பதை எதிர்ப்பது ஏன்? இதன் மூலம் இந்திய போர் விமானப்படையில் ஸ்டெல்த் தொழில்நுட்பம் இணையும். பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ஸ்டெல்த் போர் விமானங்கள் ரகசியமாக சென்று தாக்குதல் நடத்த முடியும். 3 விதமான பயிற்சி – நிலம், கடல், ஆகாயம் என மூன்று விதமான போர்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால் போர்

நேரங்களில் எளிதாக தாக்குதல்களை நடத்த முடியும். மிகவும் வேகமானது – மணிக்கு 1900 கிமீ வரை பயணிக்கலாம். இதனால் அண்டை நாடுகளுக்கு சென்று வேகமாக தாக்கிவிட்டு திரும்பி வர முடியும்.F-35 இந்த காலத்திற்கேற்ற அதிநவீன போர் விமானம் என்பதால், பல நாடுகள் இதை வாங்க ஆர்வமாக உள்ளன. F-35A – சாதாரண ரன்‌வேயில் இயங்கும் (Air Force) F-35B – குறுகிய தூரத்தில் பறந்து செல்ல கூடியது (Navy) F-35C – ஏவுகணை கப்பல்களில் இருந்து பறக்கும் வகை (Aircraft Carrier). ஆகிய வகைகள் உள்ளன. இந்த 3 வகைகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்களை அமெரிக்கா இந்தியாவிடம் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர்ந்த தொழில்நுட்பம் – தானாகவே டேட்டாவைப் பகிர்ந்து கொள்ளும் AI மற்றும் சென்சார்கள்

கொண்டது. மிகப்பெரிய ஸ்கிரீன் கொண்ட காக்பீட் காரணமாக நொடிக்கு நொடி தகவல்களை பெற முடியும். உலகின் மிகவும் முன்னேறிய போர் விமானங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. எதிரிகளுக்கு தெரியாமல் தாக்குதல் நடத்தவும், வேகமாக செயல்படவும், துல்லியமாக தாக்கவும் வல்லது. ரேடார் பாதுகாப்பு – எதிரியின் ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத Stealth Technology கொண்டது என்பதால் போர் நேரங்களில் வசதியாக இருக்கும். இதனால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்கள் நடத்துவது எளிதாகும்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *