ஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுக்கும் எந்தவொரு ராஜதந்திர முயற்சிகளையும் ஆதரிப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறியதாவது: போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினை டிரம்ப் வெற்றிகரமாக சமாதானப் படுத்தினால் நல்லது. நான் உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேசினேன்.அமைதிப் பேச்சுவார்த்தைகளில் டிரம்பின் பங்கை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆதரிக்கிறார்.உக்ரைனின் இறையாண்மைக்கான தனது உறுதிப்பாட்டைப் பேணுகையில், எந்தவொரு முயற்சிகளையும் பிரான்ஸ் ஆதரிக்கும். ஐரோப்பியர்களாகிய நாம் நமது கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தி மேலும் தன்னாட்சி பெற வேண்டும்.
இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதில் பிரான்ஸ் தனது பங்கை முழுமையாக வகிக்கும்.ஒரு வலுவான மற்றும் அதிக இறையாண்மை கொண்ட ஐரோப்பா, இப்போது அதைச் செய்வோம். இவ்வாறு பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார்.
