இந்தியாவுக்கு எப்35 போர் விமானங்கள் வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்கா அறிவித்ததற்கு கவலை தெரிவித்து உள்ள பாகிஸ்தான், இது பிராந்தியத்தில் ராணுவ சமநிலையை பாதிக்கும் என்றார்.அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இதன் பிறகு டிரம்ப் கூறியதாவது: இந்தாண்டு முதல் இந்தியாவுக்கு ராணுவ விற்பனையை அதிகரிக்கப் போவதாக அறிவித்து உள்ளார்.
�
எப்35 போர் விமானங்களை வழங்குவதற்கு வழிவகுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,” இந்தியாவுக்கு அமெரிக்கா ராணுவ தொழில்நுட்பங்களை வழங்குவது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் இந்த பிராந்தியத்தில் ராணுவ சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பிராந்திய ஸ்திரத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
�
தெற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை உதவாது. தெற்கு ஆசியாவில் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து முழுமையான பார்வையை எடுக்க வேண்டும் என்றும், ஒரு தலைபட்சமான மற்றும் யதார்த்தத்தில் இருந்து விலகிச் செல்லும் நிலைப்பாடுகளை ஆதரிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சர்வதேச நாடுகளை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
