12 February 2025 Wednesday. Pothikai.fm

477144898_945497957727906_5659015866756611215_n.jpg

12 February 2025 Wednesday. Pothikai.fm.

💐மேஷம்

மேஷம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

💐ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம்உண்டு. வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

💐மிதுனம்

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

💐கடகம்

கடகம்: பிரியமானவளின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். பலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

💐சிம்மம்

சிம்மம்: சவால், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சிறு சிறு நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

💐கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அழகும் இளமையும் கூடும்நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

💐துலாம்

துலாம்: மனதில் இனம்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துபோகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

💐விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்துபோகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

💐தனுசு

தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.

💐மகரம்

மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்‌. உத்தியோ கத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். முயற்சிகள் பலிதமாகும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

💐கும்பம்

கும்பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

💐மீனம்

மீனம்: மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து போகும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்

தேதி
Date 30 – தை – குரோதி
புதன்
இன்று
Today பௌர்ணமி
நல்ல நேரம்
Nalla Neram 10:30 – 11:30 கா / AM
04:30 – 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
Gowri Nalla Neram 01:30 – 02:30 கா / AM
06:30 – 07:30 மா / PM
இராகு காலம்
Raahu Kaalam 12.00 – 01.30
எமகண்டம்
Yemagandam 07.30 – 09.00
குளிகை
Kuligai 10.30 – 12.00
சூலம்
Soolam வடக்கு
Vadakku
பரிகாரம்
Parigaram பால்
Paal
சந்திராஷ்டமம்
Chandirashtamam பூராடம் உத்திராடம்
நாள்
Naal கீழ் நோக்கு நாள்
லக்னம்
Lagnam மகர லக்னம் இருப்பு நாழிகை 00 வினாடி 10
சூரிய உதயம்
Sun Rise 06:35 கா / AM
ஸ்ரார்த திதி
Sraardha Thithi பௌர்ணமி
திதி
Thithi இன்று இரவு 08:12 PM வரை பௌர்ணமி பின்பு பிரதமை
நட்சத்திரம்
Star இன்று இரவு 08:24 PM வரை ஆயில்யம் பின்பு மகம்
சுபகாரியம்
Subakariyam கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *