அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல எம்.பிக்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் சில எம்.பி.க்கள் கைவிலங்கு அணிந்திருந்தனர். இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது குறித்து இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கிறார்.
