தமிழ் மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் தமிழ் மக்கள் எங்களைத் தெரிவு செய்தது எம்மீதுள்ள நம்பிக்கையாலும் அன்பாலும் மட்டும்தான். ஆதலால், தமிழ் மக்களின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் எந்தக் கடினமான சூழ்நிலையிலும் துரோகம் செய்யப்போவதில்லை.“ என ஜனாதிபதி துரோகம் இழைக்கமாட்டோம் தமிழ் மக்கள் எங்களைத் தெரிவு செய்தது தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் நேற்று(17) நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் “வடக்கு மாகாணத்தில் அரசியற் கட்சிகளுக்குக் குறைவில்லை. பாரம்பரியமாக அரசியலில் ஈடுபட்டுவரும் தரப்புகள்கூட இங்கு உள்ளன. 1947ஆம் ஆண்டுமுதல் அரசியல் வரலாற்றைக் கொண்ட கட்சிகள்கூட உள்ளன. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அவர்களையெல்லாம் புறக்கணித்து எங்களைத் தெரிவு செய்தனர்.
ஏன் எங்களைத் தெரிவுசெய்ய வேண்டும்? எதற்காக எங்களைத் தெரிவுசெய்ய வேண்டும்? ஏனெனில் எங்கள் மீதான அவர்களின் அன்பும், நம்பிக்கையும்தான் இதற்கெல்லாம் காரணம்.
அந்த நம்பிக்கைக்கும் அன்புக்கும் ஒருபோதும் நான் துரோகம் செய்யப் போவதில்லை. இதற்காக நான் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடலாம், இனவாத விமர்சனங்களை நான் எதிர்கொள்ள வேண்டிவரலாம். ஆயினும், தமிழ் மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நாங்கள் துரோகம் இழைக்கப்போவதில்லை.” என தெரிவித்துள்ளார்.