நடுவானில் விமானத்தை கடத்திய அமெரிக்கர்.. துப்பாக்கியால் சுட்டுகொன்ற பயணி.. திக்திக் சம்பவம் மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் கத்தி முனையில் சிறிய ரக விமானத்தை கடத்திய அமெரிக்காவை சேர்ந்த 49 வயது நிரம்பிய நபரை பயணி ஒருவர் துப்பாக்கி எடுத்து சுட்டார். நடுவானில் நடந்த இந்த திக்திக் சம்பவம் தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.மத்திய அமெரிக்கா நாடாக
பெலிஸ் (BELIZE) உள்ளது. இந்த நாடு என்பது அளவில் மிகவும் சிறியது. இந்த பெலிஸ் நாட்டின் மக்கள் தொகை என்பது மிகவும் குறைவாக உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி பெலிஸ் நாட்டின் மக்கள்தொகை என்பது 4 லட்சத்து 10 ஆயிரத்து 825 என்ற அளவில் மட்டுமே உள்ளது.மத்திய அமெரிக்க நாடுகளில் குறைந்த மக்கள் தொகை நாடாக பெலிஸ் தான் உள்ளது. தற்போதைய நிலவரப்படி பார்த்தால் அங்குள்ள மக்கள்தொகையில் 4ல் ஒருபங்கு மக்கள் மட்டுமே பெலிஸ் நகரில் வசித்து
வருகின்றனர். மற்றவர்கள் அங்குள்ள கிராமப்புறங்களில் வசித்து வருகின்றனர். இந்த நாட்டில் உள்ள மக்களில் அதிகமானவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகின்றனர். 80 சதவீதம் பேர் கிறிஸ்தவர்களாக உள்ளனர். இந்த பெலிஸ் நாடு சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பெலிஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் பெலிஸ் நகரில் இருந்து சிறிய ரக விமானத்தில் 14 பயணிகள் சான் பிட்ரோ நகரை நாக்கி சென்று
கொண்டிருந்தனர். இந்த விமானத்தில் 14 பயணிகளுடன், 2 விமானிகள் இருந்தனர். வானில் விமானம் பயணித்து கொண்டிருந்தபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கத்தியை எடுத்து பயணிகளை மிரட்டினார். அதோடு பயணிகளை தாக்கினார். அதுமட்டுமின்றி விமானத்தை கடத்தினார்.விமானத்தில் அதிக எரிபொருட்களை நிரப்பி கொண்டு தன்னை பெலிஸ் நாட்டில் இருந்து வெளியே கொண்டு சென்று விட வேண்டும். என்று மிரட்டினார். இதனால் விமானத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
மக்கள் அனைவரும் பயந்துபோயினர். அந்த நபர் மக்களை கொன்று விடுவதாகவும் மிரட்டினார். இந்த வேளையில் விமானத்தில் பயணித்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விமானத்தை கடத்திய நபரை சுட்டார். அவரது உடலில் குண்டு பாய்ந்தது.இதையடுத்து உடனடியாக விமானம் மீண்டும் பெலிஸ் நகரில் உள்ள பிலிப் எஸ்டபிள்யூ கோல்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குண்டு காயமடைந்த விமான கடத்தல்காரர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் விமானத்தை கடத்த முயன்ற நபரின் பெயர் அகின்யிலா சா டெய்லர் என்பதாகும். 49 வயது நிரம்பிய அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கடந்த வாரம் பெலிஸ் நகருக்கு வந்துள்ளார். ஆனால் அவர் மற்ற இடங்களுக்கு செல்ல அனுமதி என்பது கிடைக்கவில்லை. இப்படியான சூழலில் தான் அவர் விமானத்தை கத்தி மு