தனித்து தேர்தலில் களம் இறங்கியுள்ளோம் டக்ளஸ் தேவானந்தா

491805529_993847229559645_2477308315644252256_n.jpg

வழமைபோல் தனித்து தேர்தலில் களம் இறங்கியுள்ளோம் – டக்ளஸ் தேவானந்தா ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக போட்டியிடும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,

வழமைபோல் தனித்து தேர்தலில் களம் இறங்கியுள்ளோம் நாங்கள் நீண்டகாலமாக கொண்டுள்ள எமது கட்சியின் கொள்கைகள் நிருபணமாகி வருகிறது.

அரசியல் தீர்வு, அபிவிருத்தி, அன்றாட பிரச்சனை போன்ற மூன்று “அ”னாக்களை முன்வைத்துள்ளோம்.

அரசியல் தீர்வுக்கான காரணம் 13ஐ வலியுறுத்தி வருகின்றோம் இதனை அன்று மறுதலித்தார்கள்.

இவ்வாறு எதிர்த்தவர்கள் நரேந்திர மோடியுடன் பேசும் போது இதனையே வலியுறுத்தினார்கள்.

தற்போது உள்ள ஆட்சியாளர்கள் இதனை அன்று எதிர்த்தார்கள் தற்போது ஏற்றுக்கொள்வார்களோ தெரியவில்லை.

முன்பு உயிர் அச்சுறுத்தல் பயம் இப்பொழுது அரசியல் பயம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

The current image has no alternative text. The file name is: 491805529_993847229559645_2477308315644252256_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *