சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமெரிக்கா திரும்பலாம்!” திடீரென மெகா பல்டி அடித்த டிரம்ப்! என்ன காரணம் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்த டிரம்ப் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது வினோதமான ஒரு திட்டத்தை டிரம்ப் அறிவித்துள்ளார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை மீண்டும்
சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் அனுமதிக்க போகிறார்களாம். இது குறித்து நாம் பார்க்கலாம் டிரம்ப் அதிபரானது முதலே அமெரிக்கா அரசு சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடுகடத்தப் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இருப்பினும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை முழுமையாக அமெரிக்காவில் இருந்து நாடுகடத்த முடியவில்லை. இதற்கிடையே சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற டிரம்ப் தரப்பு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.டிரம்ப் அரசு அதாவது சட்டவிரோதமாக அமெரிக்காவில்
குடியேறியவர்கள் தானாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதை ஊக்குவிக்கும் வகையில் டிரம்ப் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். அமெரிக்க ஊடகத்திற்கு இது தொடர்பாக அளித்த பேட்டியில் அவர் விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதாவது சுயமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறக் கடத்த ஒப்புக்கொள்பவர்களுக்கு உதவித்தொகை மற்றும் விமான டிக்கெட்டுகள் உள்ளிட்ட நிதி சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். காசு கூட தருவோம் கடுமையான குற்றச் செயல்களில் செய்தோரைச் சீக்கிரம் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம். அதேநேரம் நல்ல எந்தவொரு
குற்றப்பதிவும் இல்லாத நபர்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குத் திரும்புவதற்கான வழியை இது வழங்குகிறது. இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், “நாங்கள் அவர்களுக்கு (அமெரிக்காவை விட்டு சுயமாக வெளியேற ஒப்புக்கொள்ளும் சட்டவிரோதக் குடியேறிகள்) உதவித்தொகை வழங்கப் போகிறோம். நாங்கள் அவர்களுக்குப் பணம் மற்றும் விமான டிக்கெட்டை வழங்கப் போகிறோம்.அமெரிக்கா திரும்பலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம்.. அவர்கள்
நல்லவர்களாக இருந்தால்.. அவர்கள் அமெரிக்காவுக்குத் தேவை எனக் கருதினால் சட்டப்பூர்வமாக அவர்களை மீண்டும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அமெரிக்காவுக்கு அழைத்து வருவோம். இதற்காக நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம்” என்றார். என்ன காரணம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் குறித்த டிரம்ப்பின் நிலைப்பாட்டில் மிகப் பெரிய மாற்றமாகவே இது பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இத்தனை காலம் டிரம்ப் சட்டவிரோதமாகக் குடியேற்றியவர்களை அகற்றப் போகிறேன் என்றே தொடர்ந்து சொல்லி வந்தார். அவர்கள் மீண்டும் அமெரிக்காவில் அனுமதிக்கப் போவதில்லை என்பது போலவே பேசி
வந்தார். ஆனால், இப்போது அந்த நிலைப்பாட்டை மாற்றி நல்லவர்களாக இருந்தால் மீண்டும் அவர்களை அமெரிக்காவில் நுழைய அனுமதிப்போம் எனக் கூறியிருக்கிறார். அதேநேரம் இந்தத் திட்டம் குறித்த மற்ற விவரங்கள் எதையும் அவர் பகிரவில்லை. சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் ஹோட்டல் துறைகளில் தான் பணியாற்றி வந்தனர். டிரம்ப்பின் கடுமையான நடவடிக்கைகளால் இந்தத் துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டே டிரம்ப் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத்
துறைகளில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேறி, மீண்டும் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் நுழைய முடியும். இதன் விவசாயிகள் தேவையான ஊழியர்களைப் பெற உதவும் என அவர் குறிப்பிட்டார்.டிரம்ப் விளக்கம் அந்த நேர்காணலில் ஒரு வீடியோவையும் ஒளிபரப்பினர். அதில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வசித்து வரும் மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒருவர் பேசியிருந்தார். அவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்தவர் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை வெளியேற்றும்
டிரம்ப் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அந்த நபர் கூறியிருந்தார். அந்த வீடியோவிற்கு பதிலளித்த டிரம்ப், “நான் இதைத் தான் சொல்கிறேன்.. குற்றச் செயல்களில் செய்தவர்களை வெளியேற்ற வேண்டும். அதேநேரம் இதுபோன்ற நபர்களை நாம் இங்குத் தொடர்ந்து வைத்திருக்கலாம். நான் இப்படிச் சொல்வதால் சிலர் என் மீது கோபப்படலாம்.. ஆனால், உண்மை என்னவென்றால் இவரைப் போன்ற நபர்களால் நமது சமூகத்திற்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை. இவர்களைப் போன்றவர்கள் அமெரிக்காவுக்குத் தேவை. இவர்கள் நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் சட்டப்பூர்வமாக அமெரிக்கா திரும்பலாம்” என்றார்.