அமெரிக்க வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் 28 நாடுகளில் இலங்கை இல்லையாம் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ள புதிய இறக்குமதி வரிகளில் இருந்து, உலகின் மிகவும் ஏழை மற்றும் சிறிய நாடுகளை விலக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு விலக்கப்படாமல் இருப்பின், அந்த நாடுகளின் பொருளாதாரம் கடுமையான ஆபத்துகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது என அந்த அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, உலகின் 28 ஏழை மற்றும் சிறிய நாடுகள் அமெரிக்காவின் இருதரப்பு வரிவிதிப்பு முறைகளிலிருந்து விலக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த 28 நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை.
அமெரிக்கா விதித்துள்ள உயர்ந்த வரிவிதிப்பு விகிதங்கள் மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதி அளவுகளின் அடிப்படையில், இந்த நாடுகள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு எந்தவிதமான நேரடி அச்சுறுத்தலும் ஏற்படுத்துவதில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
