சற்று முன் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
குருநாகல்,தொரடியாவ, குருநாகல்-தம்புள்ள A6 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும்,பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
�
தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இரட்டை வண்டி எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதாகவும்,பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றிலும் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி,இரண்டு பயணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
�
இறந்த 37 மற்றும் 43 வயதுடையவர்கள் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்கள்.சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வாடகை வண்டி சாரதி விபத்து நடந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
