சொகுசு வீடொன்றில் விபச்சார விடுதி ; சுற்றிவளைப்பில் சிக்கிய அழகிகள் சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கண்டி பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றது.நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கண்டி நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
