உலகப்போரை போல தீவிரம் அடைந்த வர்த்தக போர்.. சீனா மீது 245% வரி போட்ட டிரம்ப்.. எல்லை மீறிய அமெரிக்கா
சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டது.சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தக
�
போர் உச்சம் அடைந்து உள்ளது. இது ஆயுதம் ஏந்திய போர் இல்லையென்றாலும் அதே அளவிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுத போர் மூலம் நிர்வாக பிரச்சனை வரும், உலக பொருளாதாரம் சரியும், மக்கள் வேலைகளை இழப்பார்கள், பல துறைகள் சரிந்து புதிய துறைகள் உருவாகும், பல வளர்ந்த நாடுகள் சரியும், உலக நாடுகள் இடையே உறவுகள் கசக்கும், உற்பத்தி பாதிக்கும், ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கும். இதெல்லாம் ஆயுத போரில் மட்டுமன்றி… டிரம்ப் தொடங்க உள்ள வர்த்தக
�
போரிலும் நடக்கும் அபாயம் உள்ளது. பக்கவிளைவுகள் ஒரே மாதிரிதான் இருக்கும்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதுதான் உலக அளவில் பெட்ரோல் டீசல் விலை சரிய காரணம் ஆகும். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம்
�
மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும்.அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.சீனா மீது வரி சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் . உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார். தற்போது நிலவரப்படி அமெரிக்கப் பொருட்கள் மீதான சீனாவின் 34%
�
வரிக்குப் பதிலடியாக சீன ஏற்றுமதிகளுக்கு 104% வரியை அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்கா உலகம் முழுக்க பல நாடுகளுக்கு 10% முதல் 50% வரையிலான வரிகளை விதிக்கிறது. சீனப் பொருட்களுக்கு 34% + 104% வரி விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 10, 2025 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு 34% சீனா வரியை விதிக்கிறது. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.இப்போது சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக
�
நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டது. ஏன் இந்த நடவடிக்கை? கார், செமி கண்டக்டர் எனப்படும் குறைக்கடத்தி மற்றும் விண்வெளித் தொழில்களுக்கு பயன்படுத்தத்ப்படும் சில அரிய வகை தனிமங்கள் மற்றும் கனிமங்களின் ஏற்றுமதியை சீனா முற்றிலுமாக நிறுத்தி உள்ளது. ஏவுகணைகள், காற்றாலைகள், EVகள், விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் 90 சதவீதம் பொருட்களை சீனா தடை செய்துள்ளது. சீனாவில் இருந்து இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எல்லோருக்கும் புரியும்படி சொன்னால்.. இப்போது இவி கார்கள் உள்ளன. இதில் செமி கண்டக்டர் பயன்படுத்தப்படும். இதையடுத்தே டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
