சீனாவுடன் கைகோர்த்த முகமது யூனுக்கு சிக்கல் இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்

489928606_992492979695070_7582235221107866349_n.jpg

ப்ளீஸ் உதவுங்க”.. இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. சீனாவுடன் கைகோர்த்த முகமது யூனுக்கு சிக்கல் வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் வகையில் வங்கதேச இடைக்கால அரசின் முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் நில சுங்க நிலையங்களை பயன்படுத்தி விமான நிலையம், துறைமுகத்தை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வங்கதேசம் பொருட்களை ஏற்றுமதி

செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு நிறுத்தியது. இதனால் வங்கதேசத்தின் தொழிலதிபர்கள் கதற தொடங்கி உள்ள நிலையில் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் நம் நாட்டிடம் மீண்டும் அனுமதி கோரி கெஞ்சி வருகின்றனர்.வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடக்கிறது. இந்த அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். அதோடு சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதனால் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும்

இடையேயான உறவு என்பது மோசமாகி உள்ளது.இதற்கிடையே தான் முகமது யூனுஸ் சீனா சென்று அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தேவையின்றி நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை இழுத்து பேசியது சர்ச்சையானது. சீனாவில் முகமது யூனுஸ் பேசுகையில், ‛‛வங்கதேசம் என்பது முதலீட்டுக்கு சிறந்த நாடாக உள்ளது. கடல்வழி போக்குவரத்து வங்கதேசத்தில் உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க நிலத்தால் சூழப்பட்ட பகுதி.

இங்கிருந்து கடலை அடைய முடியாது. இதனால் இந்த பகுதிகளில் நாங்கள் தான் வங்ககடலை அணுகுவதற்கான கடல் பாதுகாவலர்களாக இருக்கிறோம். இந்த நில அமைப்பு என்பது நல்ல வாய்ப்பை தரும். சீனா தனது பொருளாதாரத்தை பெருக்க இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு பொருட்களை உற்பத்தி செய்யலாம். சந்தைப்படுத்தலாம். உலகின் பிற பகுதிக்கும் எடுத்து செல்லலாம்” என்று கூறினார்.வங்கதேசத்துக்கு முதலீடு கொண்டு வரும் முயற்சியாக முகமது யூனுஸ்

தேவையின்றி இந்தியாவை இழுத்து பேசியது சர்ச்சையானது. இதன்மூலம் வங்கதேசத்தில் தொழில் முதலீடு செய்தால் நேரடியாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதை தான் அவர் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நம் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து வங்கதேசத்தின் இந்த வாய்ச்சவடாலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அதன்படி வங்கதேசத்தில் இருந்து ஏற்றுமதி பொருட்கள் இந்தியாவின் நில சுங்க நிலையங்களை பயன்படுத்தி மூன்றாம் நாடுகளுக்கு அனுப்ப வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி

செய்யப்படும் பொருட்கள் இந்திய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு கொண்டு செல்ல இந்திய நில சுங்க நிலையங்களை பயன்படுத்த கடந்த 2020ல் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் பூடான், நேபாளம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளுக்கு வங்கதேசத்தின் ஏற்றுமதி சீராக நடந்து வந்தது. இந்நிலையில், இந்திய நில சுங்க நிலையங்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை ரத்து செய்தது மத்திய அரசு. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‛‛நம் நாட்டின் துறைமுகம் மற்றும்

விமான நிலையங்களை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தி வணிகம் செய்ய வங்கதேசத்துக்கு நில சுங்க நிலையங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் விமான நிலையம், துறைமுகங்களில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. சரக்குகளில் தேக்கம் ஏற்பட்து. இதையடுத்து வங்கதேசத்துக்கான அனுமதி கடந்த 8 ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.இந்தியாவின் இந்த நடவடிக்கை என்பது வங்கதேசத்தின் தொழிலதிபர்களை கதற விட்டுள்ளது. நில சுங்க நிலையங்கள் வழியாக வங்கதேச தொழிலதிபர்கள் இந்தியாவின் விமான நிலையம், துறைமுகத்தை வங்கதேசம் பயன்படுத்த மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இது முகமது யூனுஸ்க்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே தான் வங்கதேசம் நம் நாட்டிடம் கெஞ்ச தொடங்கி உள்ளது. இந்தியாவின் துறைமுகம், விமானநிலையங்களை பயன்படுத்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதால் தொழிலதிபர்கள் தான்அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு நேபாளம், பூடானுக்கு அவர்கள் ஏற்றுமதி செய்வதற்கு மாற்றுவழியை தேடி வருகின்றனர். அது அதிக செலவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் இந்தியாவின் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை வங்கதேச சரக்கு ஏற்றுமதிக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக வங்கதேசத்தின் ஆயத்த ஆடை உற்பத்தியளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள்கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பரூக் ஹாசன் கூறுகையில்,

இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். ஏனென்றால் நாம் அண்டை நாடுகளாக உள்ளோம். இருநாடுகளும் நல்ல பார்ட்னர்களாக உள்ளது. இந்தியாவிடம் இருந்து டை, கெமிக்கல், மெஷின், நூல் உள்ளிட்ட பல பொருட்களை இறக்குமதி செய்துகிறோம். இதனால் இந்தியா அதனை மனதில் வைத்து எங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். இந்தியாவுடன் எப்போதும் நல்ல நட்பில் இருப்போம்” என்றார்.இப்படி இந்தியாவிடம் தொழிலதிபர்கள் கெஞ்ச

தொடங்கி உள்ள நிலையிலும் முகமது யூனுஸ் மட்டும் திருந்தவேயில்லை. தொழிலதிபர்கள் பிரச்சனையை சந்தித்தால் என்ன? எனது குறிக்கோள் இந்தியாவை எதிர்ப்பது மட்டும் தான் என்ற பாணியில் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் அந்தநாட்டின் தொழில்கள் முடங்கி உள்ளது. இப்போது இந்தியாவும், வங்கதேச தொழிலதிபர்களுக்கு செக் வைத்துள்ளது. இதனால் விரைவில் தொழிலதிபர்கள் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்க்கு எதிராக திரும்பலாம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *