எம்.பி. சிறீதரன் திட்டவட்டம் பட்டலந்த படுகொலைக்கு நீதி வேண்டும்

489928154_992345973043104_180450728337010387_n-1.jpg

பட்டலந்த படுகொலைக்கு நீதி வேண்டும் ; எம்.பி. சிறீதரன் திட்டவட்டம் இலங்கை தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேச சபையின் கல்மடு நகர வேட்பாளர் இ.யோகநாதனை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கல்மடு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது.இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறீதரன் எம்.பி உரையாற்றிகையிலேயே அவர் தெரிவித்துள்ளதாவது,

எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனை உள்ளன. எனக்கு கட்சிக்குள் அழுத்தம் உள்ளது. அதை எதிர்கொண்டு இறுதி வரை போராடிப்பார்ப்போம் என்று நிற்கின்றேன்.

பல பேருக்கு விளக்க கடிதம் என்னுடன் இருந்த பல பேருக்கு ஆசனம் வழங்கப்படவில்லை இவ்வாறு பல குத்துவெட்டுக்கள் சூழ்ச்சிகள் எல்லாம் நடக்கிறது இவற்றையல்லாம் கடந்தும் கட்சியுடன் நிற்க வேண்டும். கட்சி வெல்லவேண்டும் மக்கள் ஆணை திரும்ப கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்சியுடன் நிற்கின்றோம்.சிங்கள கட்சிக்குள் சபை போனால் தேசிய மக்கள் சக்தியாக இருக்கலாம் அல்லது வேறு கட்சியாக இருக்கலாம் தற்போது ஒரு மாயை தானே மாற்றம் சமவுரிமை கொடுக்கப்போகிறோம் என்று சொல்லுவார்கள் யாழ்ப்பாணத்தில் விஜித ஹேரத் தமிழில் பேசியிருக்கிறார்.

முன்பு மகிந்த ராஜபக்சாவும் தமிழில் பேசியுள்ளார். வாங்கோ எல்லாரும் ஒன்றாக இருப்போம். தமிழ் மக்களின் அரசியல் உரிமையை சரியாக கொண்டு போக முடியாத விஜித ஹேரத் தான் கடைசியாக நடந்த ஜெனீவா கூட்டத்தொடரில் சென்று தமிழ் மக்கள் எமக்கு மூன்று ஆசனங்களை வழங்கியுள்ளனர்.தமிழ் மக்கள் எங்களுடன் நிற்கிறார்கள் யுத்தத்தில் ஒருவரும் இறக்கவில்லை.ஏன் தீர்மானங்களைக் கொண்டு வாறீங்க யுத்தத்தில் இறந்தது பயங்கரவாதிகள். வடக்கு கிழக்கு என்பது தமிழர் தாயகம் சிங்கள மக்கள் வர முன்பு பஞ்ச ஈஸ்வரங்கள் வைத்து வழிபட்ட இனம் தமிழர் இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை.

ஏன் சர்வதேச விசாரணைக்கு உடன் படவில்லை. பட்டலந்த படுகொலைக்கு நீதி வேண்டும் ரணில் விக்கிரமசிங்க தான் ஜேவிபியை படுகொலை செய்ததாக தெரிவித்து அறிக்கையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளார்.ஆனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. பண்டா செல்வா ஒப்பந்தம் தூக்கி எறிவார்கள், பிரபா ரணில் ஒப்பந்தத்தை நிராகரிப்பார்கள், இலங்கை இந்திய ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று இந்தியாவுக்கு பயந்து பார்த்துக்கொண்டு இருப்பார்கள். உங்களுக்கு வாக்களிப்பதா? வரி வாங்கிற எங்களுக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும் இளங்குமரனுக்கு மின்சார கம்பம்தான் தெரியும் நாங்கள் மின்சாரம் நாங்கள் அடிச்சா தாங்க மாட்டோர். என தெரிவித்துள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *