இந்தியாவுக்கு ஷாக் தந்த வங்கதேசம்.. முகமது யூனுஸ் போட்ட உத்தரவு.. மோடி என்ன செய்யப்போகிறார் இந்தியா – வங்கதேசம் இடையே மோதல் இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பேசியது இன்னும் மோதலை அதிகப்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்தியாவின் நில சுங்கங்களை பயன்படுத்தும் வங்கதேசத்துக்கான
�
அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது. இதன் தொடர்ச்சியாக முகமது யூனுஸ் இந்தியாவின் நூல் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கு இடையே மோதல் என்பது வலுக்க தொடங்கி உள்ளது.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையானது. இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம்நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ்
�
செயல்பட்டு வருகிறார்.முகமது யூனுஸ் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். அதோடு பாகிஸ்தான், சீனாவுடன் இணைந்து நம்மை சீண்டி வருகிறார். இதனால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த 7 மாதமாக இந்தியா – வங்கதேசம் இடையேயான உறவு என்பது மோசமாகி உள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் சீனா சென்ற முகமது யூனுஸ் நம் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து பேசினார். வங்கதேசத்தில் கடல் உள்ளது. இதனால் வங்கதேசத்தில் வர்த்தகம் தொடங்க சீனா முன்வர வேண்டும் என்று கூறினார். அதோடு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அதுபோன்ற வசதிகள் இல்லை எனவும், வங்கதேசத்தில் வர்த்தகம் செய்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை அவர்
�
மறைமுகமாக பேசியிருந்தார். இதற்கு நம் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு இந்தியா வழியாக நிலச்சுங்கங்கள் மூலம் வங்கதேசம் பூடான், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தது. இந்த அனுமதியை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தியது. இதற்கு பதிலடியாக முகமது யூனுஸ் தற்போது இந்தியாவை மீண்டும் சீண்ட தொடங்கி உள்ளார். அதன்படி இந்தியாவில் இருந்து நூல் இறக்குமதி செய்வதை நிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.அதாவது பெனாபோல், போம்ரா, சோனாமஸ்ஜித், வங்காளபந்தா மற்றும் புரிமாரி ஆகிய இடங்களின் வழியாக
�
வங்கதேசத்துக்கு இந்திய நூல்கள் சென்று வந்தன. தற்போது அதனை நிறுத்துவதாக அவர் கூறியுள்ளார். மேலும் வெளிநாடுகளிடம் இருந்து ஆயத்த ஆடைகளுக்கு நூல் இறக்குமதி செய்வதால் உள்நாட்டில் அந்த தொழில் செய்வோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இந்த முடிவை எடுத்துள்ளதாக வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.முன்னதாக வங்கதேச ஜவுளி ஆலைகள் சங்கம் சார்பில் இடைக்கால அரசிடம் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது இடைக்கால அரசு நில
�
துறைமுகங்கள் வழியாக இந்தியாவில் இருந்து நூல் இறக்குமதி செய்கிறது. இது மிகவும் மலிவான விலையில் உள்ளது. இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நிதி இழப்பை சரிசெய்ய இந்தியாவில் இருந்து வரும் நூல் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். தற்போது அதன்படி இந்த நூல் இறக்குமதி இந்தியாவில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக
�
இடைக்கால அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் வங்கதேச அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். மேலும் இந்தியாவுக்கு பதில் பாகிஸ்தானிடம் இருந்து நூல் மற்றும் அதற்கான மூலப்பொருள் இறக்குமதி செய்ய வங்கதேசம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் இந்தியாவின் நூல் இறக்குமதியை ரத்து செய்து இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
