41,000 யூரோக்கள், 40,000 கனடிய டொலர்கள் சட்டவிரோதமாக கொண்டு செல்ல

download-2-4.jpg

2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடோல்கெலே பகுதியில் வசிக்கும் 52 வயது தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பெருந்தொகை பணம்
கடந்த வெள்ளி கிழமை அதிகாலை 01.07 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-308 இல் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவர் தனது சூட்கேஸில் வெளிநாட்டு நாணயங்களை மறைத்து வைத்திருப்பதை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்ததை அடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பின்னர் சுங்க அதிகாரிகள் அவரைக் கைது செய்து, அவரது பொதிகளை ஆய்வு செய்தபோது, 41,000 யூரோக்கள், 40,000 கனடிய டொலர்கள், 15,000 சுவிஸ் பிராங்குகள், 3,500 சவுதி ரியால் மற்றும் 4 மில்லியன் இலங்கை ரூபாய்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், சுங்கத்துறையினால் விசாரணை நடத்தப்பட்டது, இதன் போது பயணி தன்னுடன் எடுத்துச் செல்ல முயன்ற அனைத்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, அவருக்கு 31,76,800 ரூபாய்அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *