மேமாதம் திருக்கணித பிரகாரம் மூன்று வருட கோள்கள் பெயர்ச்சி ஆகின்றன மேமாதம் 14ம் தேதி குருபெயர்ச்சியும் மே 18ம் தேதி ராகு+கேது பெயர்ச்சியும் நடைபெறுகின்றன.குருபகவான் ஒருவருட காலமும் ராகு+கேது ஒன்றரை ஆண்டு காலமும் உங்கள் ராசிகளுக்கு எவ்விதமான பலன்களை வழங்கும் என்பதை காண்போம்.
மேஷம்.
மேஷராசி நண்பர்களே இந்த மாதம் நிகழவுள்ள கிரக பெயர்ச்சிகள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.
மே மாதம் 18ம் தேதி ராசிக்கு 12ம் இடத்தில் இருந்த ராகு 11ம் இடத்திற்க்கு பின்னோக்கி வருவதால் ராகுவால் பல நன்மைகள் நடக்கும் எதிர்பாராத திடீர் தன வரவுகள் உண்டாகும்.
கடன் சுமைகள் குறையும் புதிய வேலை வாய்புகள் மனதிற்க்கு பிடித்த வேலை மாற்றங்கள் கிடைக்கும் மருத்துவ விரைய செலவுகள் குறையும்.
வெளிநாடு வேலை வாய்புகள் உருவாகும் .
குருபகவான் ராசிக்கு 2-ம் ஸ்தானமான தன ஸ்தானத்தில் அமர்ந்து யோகநிலைகளை வழங்கி வந்த போதிலும் மே 14 ம் நிகழவுள்ள குருபெயர்ச்சியில்
3ம் இடத்துக்கு சென்றாலும் பெரிய பாதிப்புகள் தரனமாட்டார்.
ஆடம்பர செலவுகளை குறைப்பது நன்று கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் .
கேது 6-ம் இடத்தில் இருந்து 5-ம் இடத்துக்கு பின்னோக்கி வருவதால் புத்திர வழியில் சில மன ஸ்தாபங்கள் வரக்கூடும்
சகோரரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும் பூர்வீக சொத்துகளால் ஆதாயம் உண்டாகும் ஆன்மீக வழிபாடுகளில் கவனத்தை செலுத்தவும் சோம்பல் அதிகரிக்கும் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்..
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் முருகன் வழிபாடு செய்து வரவும் அறுபடை தலங்களுக்கு சென்று வருவதால் மனதில் அமைதி பிறக்கும் நல்லதே நடக்கும்.
