அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். சித்திரை திருநாள் (தமிழ்ப் புத்தாண்டு) என்றால் என்ன?
தமிழ்ப் புத்தாண்டு அன்று, புத்தாடை அணிந்து கோவிலுக்கு செல்வது, பொங்கல் வைத்து வழிபடுவது, உறவினர்களுக்கு இனிப்பு வழங்குவது, பெரியோரிடம் ஆசி பெறுவது வழக்கம்.
தாம்பாளத் தட்டில், முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் பிற பழங்கள், ஒரு எலுமிச்சம் பழம், வெற்றிலை, பாக்கு, பூக்கள், மஞ்சள், குங்குமம், நகைகள், ரூபாய் நோட்டுக் கட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றை, கடவுள் படத்தின் முன் வைத்துக் கொள்ள வேண்டும். புத்தாண்டு அன்று காலை எழுந்தவுடன், தாம்பாளத் தட்டில் உள்ள கனிகளை பார்த்தபடி கண்விழிக்க வேண்டும்.
அறுசுவை சமையல் செய்து, இறைவனுக்கு படைத்து உண்ண வேண்டும்.
வீட்டில் இருக்கும் முதியவர்கள், வயதில் சிறியவர்களுக்கு பணம் கொடுத்து வாழ்த்துவது வழக்கம்
