திருவண்ணாமலை அருகே காலையிலேயே சோகம்.. அரசு பஸ் கார் மோதி விபத்து.. 4 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். புதுவையில் இருந்து பெங்களூர் சென்ற காரும், சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
�
வருகிறார்கள்.திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதியில் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. காரில் நண்பர்கள் 4 பேர் இருந்துள்ளனர். புதுவையில் இருந்து பெங்களூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் டிரைவர் தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்
�
காரில் இருந்த நண்பர்கள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் பலியான 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கார் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. எனினும் விபத்து தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
