மான் இறைச்சியை கடத்திச் சென்ற இருவர் கைது மட்டக்களப்பு கரடியனாறு பிரதேத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்துக்கு பட்டா ரக வாகனத்தில் 20 கிலோ மான் இறைச்சி கடத்திச் சென்ற இருவரை இன்று வியாழக்கழமை (10) பகல் செங்கலடி கறுத்த பாலத்தில் வைத்து கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த பாலத்தில் இன்று பகல் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்தை நோக்கி பயணித்த குறித்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மறைத்து கடத்திக் கொண்டுசெல்லப்பட்ட 20 கிலோ மான் இறைச்சியை மீட்டதுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
செங்கலடி பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரும் பங்குடாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
