அரச சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி அரச துறையில் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 18,853 பட்டதாரிகள் மற்றும் இளைஞர், யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் பல்வேறு நிறுவனங்களில் பணிக்குழாமினரை மீண்டும் மீளாய்வு செய்து, அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்குப் பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
