தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடிதம்

download-2-6.jpeg

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிப்பதற்காக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான, எஸ்.ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், துரைராசா ரவிகரன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் பா.சத்தியலிங்கம் உள்ளிட்டோரிடம் நேற்று (04) இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.கடிதத்தின் மூலம் கோரிக்கை
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் குறித்த கடிதத்தின் மூலம் கோரப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வு தொடர்பில் ஏகோபித்த உடன்பாடு காணப்படாமையும், ஐக்கியமின்மையுமே இதற்குப் பிரதான காரணமாகும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.இந்தநிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்குத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமையினால், அவர்கள் அனைவரும் ஏகோபித்த குரலில் ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *