ஜப்பானிய கப்பல்கள் கொழும்பை வந்தடைந்தன

4.jpg

இரண்டு ஜப்பானிய கப்பல்கள் கொழும்பை வந்தடைந்தன ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான புங்கோ (எம்.எஸ்.டி. – 464) மற்றும் எடாஜிமா (எம்.எஸ்.ஓ – 306) என்ற கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக நேற்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பல்களை இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உராகா-கிளாஸ் மைன்ஸ்வீபர் டென்டர் வகைக்கு சொந்தமான புங்கோ என்ற கப்பலானது 141 மீற்றர் நீளமும், மொத்தம் 125 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர்டனாகா கோஜி பணியாற்றுகிறார்.

இதேபோன்று மைன்ஸ்வீபர் வகைக்கு சொந்தமான எடாஜிமா என்ற கப்பலானது 67 மீற்றர் நீளமும், மொத்தம் 54 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ஒடா டாகாயுகி பணியாற்றுகிறார்.

மேலும், இந்த கப்பல்களானது இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட தீர்மானித்துள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் நாளை வெள்ளிக்கிழமை நாட்டிலிருந்து புறப்படவுள்ளன.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *