சற்றுமுன் மட்டக்களப்பு கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான கார்

487481334_981417854135916_2125631238719421218_n.jpg

சற்றுமுன் மட்டக்களப்பு கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான கார்

இன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

இவ் விபத்தில் காரில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது அத்தோடு உயர் மின் அழுத்த மின்சாரத் தூணும் உடைந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இன்று காலையிலிருந்து இப் பிரதேசத்தில் மழை பெய்து வருகிறது மழையின் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

மேலதிக விபரங்களுக்கு

காத்தான்குடி பொலிஸ் நிலையம் – 0652246595

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *