சேவை செய்வதற்காகத்தான் நாம் வந்திருக்கின்றோமே தவிர, எமக்கு சேவை செய்வதற்காக மக்கள் இல்லை

Jeevan-Thondaman-2.jpg

மக்களுக்காக சேவை செய்வதற்காகத்தான் நாம் வந்திருக்கின்றோமே தவிர, எமக்கு சேவை செய்வதற்காக மக்கள் இல்லை – ஜீவன் தொண்டமான் எம்.பி நோர்வூட் பிரதேச சபைக்கான, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நோர்வூட் பிரதேச சபைக்காக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும், இ.தொ.கா தோட்ட தலைவர், தலைவி, பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பானது ஹட்டன்-டிக்கோயா நகர சபை அபுசாலி மண்டபத்தில் இடம்பெற்றிருந்திருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நீங்கள் அனைவரும் சேவல் சின்னத்தை வெற்றிபெற வைத்து கடந்த காலங்களில் எவ்வாறு நோர்வூட் பிரதேச சபையினை வெற்றிப் பெற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொடியினை பறக்க விட்டீர்களோ அதே போலவே இம்முறையும் நோர்வூட் பிரதேச சபையினை வெற்றிக்கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

நீங்கள் அனைவரும் ஒன்றை புறிந்துக்கொள்ள வேண்டும்., கடந்த காலங்களில் என்னதான் சில அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சி மன்றங்களை உறுவாக்கி இருந்தாலும், சில இடங்களில் சரியான உறுப்பினர்களை க உறுவாக்கவில்லை.

அதாவது ஏற்கனவே உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்த தற்போதை வேட்பாளர்கள் அனைவரும் கடந்தக்கால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு இம்முறை போட்டியிடுகின்ற புதிய வேட்பாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

மேலும் மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் நாம் வந்திருக்கின்றோமே தவிர, எமக்கு சேவை செய்வதற்காக மக்கள் இல்லை என்று அனைவர் மத்தியிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.

மேலும் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும் நிதிச் செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், உபத்தலைவர் அர்ஜுன் ஜெயராஜ் (இளைஞர் பிரிவு), கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்துக்கொண்டார்கள்.

இம்முறை நடைபெறவுள்ள 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நோர்வூட் பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *