வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம்

images-61.jpeg

வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் Whatsapp ன் புதிய அப்டேட் வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். குறுஞ்செய்தி அனுப்பும் தளமாக முதலில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் கையகப்படுத்தியதில் இருந்து பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு வருகிறது.

ஆடியோ, வீடியோ, பிடிஎப் பைல்கள் அனுப்பும் வசதி, வாட்ஸ் அப்பில் வீடியோக்கள், புகைப்படங்களை ஸ்டேட்டசாக வைக்கும் வசதி என பலப்பல அப்டேட்கள் அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டுள்ளன. ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்றை கொண்டு வந்து இருக்கிறது.

அதாவது, இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ்-அப் ஸ்டேட்டசிலும் பாடல்களை வைக்கும் வகையில் மெட்டா புதிய அப்டேட் செய்துள்ளது. புகைப்படம் ஒன்றை பதிவிட்டுவிட்டு பாடல்களை ஒலிக்க வைக்கும் வகையில் ஸ்டேடஸ் வைக்கமுடியும். இந்த புதிய அப்டேட் வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *